முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய குற்றவியல் சட்டங்கள்: கருத்து தெரிவிக்க தலைமை நீதிபதி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      இந்தியா
Chandrachut

 புது டெல்லி, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுப்பு தெரிவித்து விட்டார்.

டெல்லியில் மூன்று நீதிமன்றங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை நீதிபதி நேற்று கலந்து கொண்டார்.  இந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், 

பிற கட்டிடங்களை போன்று செங்கல் மற்றும் கான்கிரீட்டால் ஆனது நீதிமன்ற கட்டிடம் அல்ல. இவை நம்பிக்கையால் உருவாக்கப்படுபவை. நீதிமன்றங்கள் நீதியின் நற்பண்புகளையும், சட்டத்தின் ஆட்சியையும் உணர்த்துகின்றன  எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, இந்த சட்டங்கள் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார். 

முன்னதாக புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டங்கள் இன்னும் அமலுக்கு வராததால் வழக்கை விசாரணை இன்றி தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து