முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு : 2 பேர் பணியிட மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2024      தமிழகம்
bus-2022 08 25

Source: provided

 தஞ்சை : தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராம பகுதியிலிருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக நகரப் பேருந்துகளில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகளை முறையாக இயக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இயக்கும் பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், எங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் வேகமாக செல்வதாக புகார் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், இதனை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இதனையடுத்து பேருந்தில் ஏற்ற‌ மறுத்த நடத்துநர் யேசுதாஸ் மற்றும் நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில், இருவருக்கும் பணியிட மாற்றம் செய்து கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் ராஜசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து