முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      இந்தியா
Arunkumar-Namboothiri-2024-

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான மேல்சாந்திகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அதே போல் இந்த ஆண்டும் புதிய மேல்சாந்திகள் தேர்வு நடந்தது. தேர்வு பட்டியல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 25 பேரும், மாளிகைபுரம கோவிலுக்கு 15 பேரும் இடம் பெற்றிருந்தனர். 

இந்நிலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலையில் நேற்று நடந்தது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன், தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் அஜிகுமார், சுந்தரேசன், சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது.

பந்தளம் அரண்மனை குழந்தைகள் ரிஷிகேஷ் வர்மா, வைஷ்ணவி ஆகியோர் புதிய நம்பூதிரிகளுக்கான சீட்டை எடுத்தனர். அதில் ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். கொல்லம் சக்திகுளங்கரா பகுதியை சேர்ந்த இவர் ஆட்டுக்கல் கோவிலின் முன்னாள் மேல்சாந்தி ஆவார்.

இதே போன்று மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஆவார். புதிய மேல்சாந்திகள் இருவரும் நவம்பர் 15-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து