முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. மாநாடு: ஆத்தூரில் இன்று ஆலோசனை கூட்டம்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      தமிழகம்
Vijay 2024-09-09

சென்னை, தமிழக வெற்றிக்கழக  முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரம்மாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

கனமழை காரணமாக தாமதமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து