முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி சொத்துகள் மீட்ட இந்து சமய அறநிலையத்துறை

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்
Shekharbabu 2024-06-24

Source: provided

சென்னை : சென்னை தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி, தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான சர்வே எண் 826/1-ல் 560 சதுரடி பரப்பிலான வணிக மனை மற்றும் சர்வே எண் 826/8 –ல் 2,886 சதுரடி பரப்பிலான குடியிருப்பு மனை என மொத்தம் 3,446 சதுரடி சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்தன.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் உத்தரவின் படியும், ஆணையரின் சீராய்வு மனு தீர்ப்பின் படியும், இந்த சொத்துகள் உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.3.5 கோடி ஆகும். இந்நிகழ்வின்போது வட்டாட்சியர் வேங்கடம், திருக்கோவில் செயல் அலுவலர் ரமேஷ், சரக ஆய்வர் உஷா, சிறப்புப் பணி செயல் அலுவலர்கள் குமரேசன், செந்தில், தினகரன், நித்யானந்தம், சுசில்குமார் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து