முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் 2 நாட்கள் நீதிமன்ற காவல்: கோர்ட்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

தேனி, சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு சங்கரை சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்த தேனி போலீசார், நேற்று காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4-ம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோயமுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.‌

அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் சுமார் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேர் மீது பழனி செட்டி பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் பின்னர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த சவுக்கு சங்கருக்கு நேற்று முன்தினம் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்த தேனி போலீசார், சவுக்கு சங்கரை கைது செய்து நேற்று காலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.‌ பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் மீண்டும் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். பின்னர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், மதுரை போதைபொருள் சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் போலீஸ் காவலுடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து