முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கருக்கு எதிரானது பாதிய ஜனாதா இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

டெல்லி : பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கருக்கு எதிரானது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அம்பேத்கருக்கு எதிராக செயல்படுவதாகவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது சர்ச்சையான நிலையில், அது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களுடன்  பேசியதாவது:- 

அம்பேத்கர் குறித்த எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும். அதன் பிறகு மற்றவர்கள் பேச வேண்டும். எனது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் திரித்துக் கூறுகின்றனர். எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வைத்து பேசுவதா? அம்பேத்கரின் கொள்களைகளை உயர்த்திப்பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான். அம்பேத்கரின் புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பா.ஜ.க. அரசுதான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.

நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். அம்பேத்கரை 2 முறை தோல்வி அடையச் செய்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அரசுதான் அம்பேத்கரின் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலான திட்டங்களை வகுத்தது பா.ஜ.க.தான். காங்கிரஸ் ஆட்சியில் அம்பேத்கருக்கு எந்தவொரு நினைவகமும் ஏற்படுத்தவில்லை. மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அம்பேத்கருக்கு நினைவுச் சின்னம் எழுப்பினர். ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது? என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து