முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்
Vijay 2023-12-30

Source: provided

சென்னை : அம்பேத்கர் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை என்று தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என்றும் அவமதித்து விட்டதாகவும் கூறி இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு அமித்ஷா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த மத்திய அரசின் உள்துறை மந்திரி அமித்ஷாவை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து