முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான தமிழக அரசின் நலத்திட்டங்கள் என்ன? அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்
Mathivendan 2023-04-13

சென்னை, தி.மு.க. ஆட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள் என்னென்ன என்று அமைச்சர் மதிவேந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

 கடந்த 3 ஆண்டு காலத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ. 46.65 கோடி செலவில் 2 ஆயிரம் பட்டியல் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுவது மிகப் பொருத்தமுடையதாகும். இந்த அரசு அமைந்தவுடன் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் தமிழ்நாடு மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் செயல்படும் இவ்வாணையத்தின் மூலம் தற்போது வரை 3,695 மனுக்கள் பெறப்பட்டு 2,945 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுக் காலத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் ரூ.46.65 கோடிச் செலவில், 2 ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்புப் பெற 90 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரி சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. ரூ.10 கோடிச் செலவில், 200 நிலமற்ற பட்டியல் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.45 கோடி மதிப்பீட்டில் எம்.சி. ராஜா விடுதி வளாகத்துக்குள் சுமார் 1,00,000 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதியும் ரூ.28 கோடி மதிப்பீட்டில் 4 ஆதிதிராவிடர் மாணாக்கர் விடுதிகளுக்கு புதிய விடுதிக் கட்டடங்கள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, நீலகிரியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் நான்கு புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல எண்ணற்றத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசின் சீரிய முயற்சிகளால் ஆண்டுதோறும் பட்டியலின பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளிலும் சமூகநீதிக் கோட்பாட்டை வலியுறுத்தி செயல்படும் திராவிட மாடல் அரசின் கீழ் ஆதி திராவிடர் நலத்துறை மேலும் பல சாதனைகளைப் படைக்கும். சமூகநீதி லட்சியப் பயணத்தில் இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்படும் முதல்வரின் தலைமையின் கீழ் சமத்துவ சமுதாயம் நோக்கி பயணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து