முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்
cm 2024-12-03

Source: provided

சென்னை : சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டியல் நேற்று வெளியாகியிருக்கிறது. மொத்தம் 24 மொழிகளில் 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரலாற்றுப் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக சுதேசிஸ்டீம் நூலை ஏ.ஆர்.வி சலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் எழுச்சி எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து