முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை. மாணவி விவகாரத்தில் ஞானசேகரனுடன் பேசியது யார்? - இ.பி.எஸ். மீண்டும் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : பல்கலை. மாணவி விவகாரத்தில் ஞானசேகரனுடன் பேசிய அந்த சார் யார் என்று இ.பி.எஸ். மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி அதிர்ச்சி தருகிறது. அண்ணா பல்கலைகழக விவாரத்தில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஞானசேகரனுடன் பேசிய அந்த சார் யார்? மாணவி அளித்த புகாரில் தான் இன்னொருவர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி தப்பித்து விடக்கூடாது. காவல்துறை ஆணையருடன் முரண்பட்டு உயர்கல்வி அமைச்சர் பேசுகிறார். பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இத்தனை அமைச்சர்கள் பேசுவதற்கு என்ன காரணம். யாரை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சி செய்கிறது? இவ்வளவு பயம் ஏன்?  பாதிக்கப்பட்ட பெண் அளித்த முதல் தகவல் அறிக்கையில் பதிவிடப்பட்ட அந்த நபரை காப்பாற்றவே தொடர்ந்து அமைச்சர்கள் பேசுகின்றனர்.

 பொள்ளாச்சி விவகாரத்தில் உடனடியாக சிபிஐ வசம் வழக்கு விசாரணையை ஒப்படைத்தோம். புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலில் செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

ஆட்சி மீதான பழியை மறைப்பதற்காகவே அமைச்சர்கள் மாறிமாறி அறிக்கை வெளியிடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதற்கு கண்டனம். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரவே அதிமுக போராட்டம் நடத்தியது. போராட்டம் நடத்துவோரை கைது செய்ய 1000 போலீசார் வருகின்றனர், பாலியல் விவகாரத்தில் இந்த வேகத்தை காட்டாதது ஏன்?

குமரி கண்ணாடி பாலம் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியாவுடன் இந்த கோரிக்கையை வைத்தோம். கொரோனா காரணமாக பணிகள் தடைப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து