எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக வரும் 20-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகமே வெடித்துவிடும்" என்று எச்சரித்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் மார் அ லாகோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், "ஜனவரி 20ம் தேதிக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது ஹமாஸுக்கு நல்லதாக இருக்காது, உண்மையில் யாருக்கும் நல்லதாக இருக்காது. அனைத்து நரகமும் வெடித்துவிடும். இனி நான் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் அதுதான். அவர்கள் நீண்ட காலத்திற்கு பணயக்கைதிகளை விடுவித்திருக்க வேண்டும். அக்டோபர் 7 (2022) இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடந்தியிருக்கக் கூடாது. அந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், மக்கள் அதை மறந்து விடுகிறார்கள்.
இனி அவர்கள் பணயக்கைதிகள் அல்ல. இஸ்ரேலில் இருந்து வருபவர்கள், என்னிடம் கெஞ்சுகிறார்கள். எனது மகனின் உடலை நான் திரும்பப் பெற முடியுமா? மகளின் உடலை நான் திரும்பப் பெற முடியுமா? என்று அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்த அழகான பெண், அவளை ஹமாஸ் அமைப்பினர் உருளைக்கிழங்கு மூட்டை போல காரில் வீசினார்கள். அவளுக்கு என்ன ஆனது என்று நான் கேட்டதற்கு, அவள் இறந்துவிட்டாள் என்றார்கள். அவளக்கு 19, 20 வயது உள்ள அழகான பெண் அவள். பேச்சுவார்த்தையை நான் காயப்படுத்த விரும்பவில்லை என்று சொல்கிறேன். அதேநேரத்தில், நான் பதவியேற்கும் முன் பணயக்கைதிகள் ஒப்படைக்கப்படுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும்” என்று எச்சரித்தார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க பணயக்கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தையில், மத்திய கிழக்கிற்கான ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவன் சார்லஸ் விட்காப் ஈடுபட்டுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் விவகாரத்தில் நாங்கள் அதன் விளிம்பில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். தாமதமாவதற்கான காரணம் பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. எந்த வகையிலும் எதிர்மறையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், அதிபரின் அந்தஸ்து, அவரது எதிர்பார்ப்பு, அவரது எச்சரிக்கை ஆகியவைதான் இந்தப் பேச்சுவார்த்தைக்கு உந்துதலாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் சில பெரிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். பதவியேற்புக்கு முன் அதிபரின் சார்பாக சில நல்ல விஷயங்களை நாங்கள் அறிவிப்போம் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகவும் நல்ல முறையில் இணைந்து செயல்படுகிறோம். எங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்; சில உயிர்களைக் காப்பாற்றுவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பு இல்லை: ட்ரூடோ உறுதி
08 Jan 2025புளோரிடா : கனடா, அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பே இல்லை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
08 Jan 2025சென்னை : தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசி எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்யக்கூடாது : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
08 Jan 2025சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசி எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.
-
சென்னை காவல் ஆணையருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பா.ஜ.க வழக்கு
08 Jan 2025சென்னை : ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்
-
ஆபாச பட நடிகை வழக்கு: தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய டிரம்ப் கோரிக்கை நிராகரிப்பு
08 Jan 2025நியூயார்க் : ஆபாச பட நடிகை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய டொனால்டு டிரம்பின் மனுவை தள்ளுபடி செய்து மன்ஹாட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பும்ராவை சீண்டிய விவகாரம்: தவறை ஒப்புக்கொண்ட கான்ஸடாஸ்
08 Jan 2025சிட்னி : இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ராவை தான் சீண்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
-
திருப்போரூர் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடமே ஒப்படைப்பு
08 Jan 2025சென்னை : திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு: டிரம்ப் பதவியேற்கும் வரை அரை கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி
08 Jan 2025நியூயார்க் : ஜிம்மி கார்டர் மறைவு காரணமாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு
-
லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
08 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.
-
பள்ளியில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
08 Jan 2025விழுப்புரம் : தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீ
-
உத்தரபிரதேசத்தில் நடந்த வினோதம்: பிச்சைகாரருடன் ஓடியதாக மனைவி மீது போலீசில் புகார்
08 Jan 2025லக்னோ : உத்தர பிரதேசத்தில் பிச்சை காரருடன் தனது மனைவி ஓடி விட்டதாக 6 குழந்தைகளின் தந்தை போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெண் உடலமைப்பு பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே : கேரள உயர்நீதிமன்றம் கருத்து
08 Jan 2025கொச்சி : பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
-
பிரபல பாலிவுட் நடிகை வீட்டில் வைர நகை திருடிய பெயிண்டர் கைது
08 Jan 2025மும்பை : பாலிவுட் நடிகை பூனம் தில்லான் வீட்டில் வைர கம்மலை திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
-
சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு திபெத்தில் 515 அதிர்வுகள் பதிவு
08 Jan 2025பீஜிங் : திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு 515 அதிர்வுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
08 Jan 2025சென்னை : நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
எலான் மஸ்க் புதிய விருப்பம்
08 Jan 2025பிரபல கால்பந்து கிளப் அணியான லிவர்பூல் அணியை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ : முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
08 Jan 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினர்.
-
ஆஸ்திரேலியாவில் சுற்றுலா விமானம் விபத்து-3 பேர் பலி
08 Jan 2025பெர்த் : ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 3 வெளிநாட்டினர் பலியாகினர்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஜஸ்பிரீத் பும்ரா
08 Jan 2025துபாய் : ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதுபெற்ற பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
-
அதிவேகமாக 10 போட்டிகளில் வென்ற கேப்டன்: புதிய சாதனையை நோக்கி தென்னாப்பிரிக்க கேப்டன்
08 Jan 2025கேப்டவுன் : தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 74 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
மணிப்பூரில் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல்
08 Jan 2025இம்பால் : மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
மக்களின் பிரச்னைகளை பற்றி பேச வேண்டும்: பா.ஜ.க. வேட்பாளர் பேச்சு; பிரியங்கா கடும் கண்டனம்
08 Jan 2025புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.
-
கர்நாடகாவில் நிகழ்ந்த சோகம்: டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி 3 பேர் பலி
08 Jan 2025பெங்களூரு : கர்நாடகாவில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
-
நடிகை ஹனி ரோஸ் புகார்: பிரபல தொழிலதிபர் கைது
08 Jan 2025கொச்சி : மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய
-
இஸ்ரேல் கைதிகளை விடுவிக்காவிட்டால்... ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
08 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக வரும் 20-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கி