முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் குறித்த பாக். நீதிமன்றகுழு அறிக்கை சாட்சியாகாது

புதன்கிழமை, 18 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 18 - மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்ற குழுவினர் மும்பையில் வந்து விசாரணை நடத்திய அறிக்கையை சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று ராவல்பிண்ட் கோர்ட்டு யாரும் எதிர்பாராதவிதமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மும்பை தாக்குதலில் தொடர்பான 7 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து அரபு கடல் வழியாக 10 தீவிரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் 300 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டனர். ஒரே தீவிரவாதியான கசாப் மட்டும் உயிருடன் சிக்கினான். அவனுக்கு சுப்ரீம்கோர்ட்டில் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஜிண்டால் என்ற தீவிரவாதி தற்போது சிக்கியுள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து கொண்டு உதவிய 7 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. அவர்கள் மீது ராவல்பிண்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து நீதிமன்ற குழுவானது மும்பைக்கு சென்று போலீஸ் அதிகாரி, டாக்டர்கள் ஆகியோர்களுடன் விசாரணை நடத்தியது. ஆனால் அவர்களிடத்தில் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் நீதிமன்ற குழுவானது விசாரணைக்கு பிறகு ஒரு அறிக்கையை அந்த நாட்டு அரசிடம் சமர்ப்பித்தது. இந்தநிலையில் இந்தியா சென்ற நீதிமன்ற குழுவுக்கு குறுக்கு விசாரணை நடத்த இந்திய அரசு அனுமதிக்கவில்லை. அதனால் இந்த அறிக்கையை ஒரு சாட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று ராவல்பிண்டி கோர்ட்டு அறிவித்துள்ளது. இந்த கோர்ட்டில்தான் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 7 தீவிரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க ஜகீர் ரகுமான் லஹ்வி சார்பாக வழக்கறிஞர் கவுஜா ஹரீஸ் அகமத் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹபிப் அகமத், இந்தியாவுக்கு சென்ற பாகிஸ்தான் நீதிமன்ற குழுவின் அறிக்கை சரியாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அந்தமாதிரி இல்லாததோடு குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதிக்கப்படாததால் அந்த அறிக்கை சட்டவிரோதமானது என்றும் அதை ஒரு சாட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago