முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஜோகோவிக், செரீனாவெற்றி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், ஆக. - 30 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் முன்னணி வீரரான ஜோகோவிக், முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்கு முன் னேறினர். ஆனால் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான கரோலினா வோஸ்னியா க்கி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளி யேறினார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒப ன் போட்டிகள் முக்கிய நகரமான நியூயார்க்கில் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இரு க்கிறது. இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்று ம் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் செர்பிய வீரரான நோவக் ஜோகோ விக்கும், இத்தாலி வீரரும் மோதினர். இதில் உலகின் 2 -ம் நிலை வீரரான ஜோகோவிக் சிறப்பாக ஆடி 6 -1, 6 -0, 6 -1 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரன்கியை தோற்கடித்தார். மற்றொரு முதல் சுற்று ஆட்டம் ஒன்றி ல் செக். குடியரசு வீரரான தாமஸ் பெ ர்டிச்சும், பெல்ஜியம் வீரரும் மோதினர். இதில் உலகின் 6-ம் நிலை வீரரான பெர் டிச் அபாரமாக ஆடி, 7 -5, 6 -3, 6 -3 என்ற செட் கணக்கில் பெல்ஜியம் வீரர் கோபினை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் ஆன்டி ரோடிக் (அமெரிக்கா), டிசோங்கா (பிரான்ஸ்), அல்மாக்ரோ (ஸ்பெயின் ) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன் னேறினர்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனையான செ ரீனா வில்லியம்சும், சகநாட்டு வீராங் கனையான சோகோவு ம் மோதினர் . இதில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான செரீனா சிறப்பாக ஆடி, 6 -1, 6 -1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் சோகோவை தோற்கடித்து 2- வது சுற் றுக்குள் நுழைந்தார். இதே போல 2-ம் நிலை வீராங்கனையான ரட்வான்ஸ்காவும், ரஷ்ய வீராங் கனை பிரிட்கோவும் மற்றொரு ஆட்ட த்தில் மோதினர். இதில் போலந்து வீராங்கனை வெகு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படு த்தி ரஷ்ய வீராங்கனையை 6 -1, 6 -1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி னார். மற்ற ஆட்டங்களில் செர்பிய வீராங்க னை இவானோவிக், அமெரிக்க வீராங் கனை வீனஸ் வில்லியம்ஸ் ,ஜெர்மனி வீராங்கனை கெர்பர் ,இத்தாலி வீராங் கனை சாரா இராணிஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago