முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு : செப். 30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      தமிழகம்
Ooty 2024-05-31

Source: provided

சென்னை : நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என்ற நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் முறை மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. ஒரே நாளில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குவிவதால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.மே மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை ஜூன் 30-ஆம் தேதி வரை பின்பற்றப்படும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இது செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்குச் செல்லும் வாகனங்கள் குறித்து ஐஐடி, ஐஐஎம் மையங்கள் தரப்பில் ஆய்வு செய்ய விருப்பதாகவும், இ-பாஸ் நடைமுறையை நீட்டிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதையடுத்து, செப்.30 வரை இ-பாஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தின் வழியே இ-பாஸ் பெறுவதுடன், அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை 1077 என்ற எண்ணிலும், கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறும் போது, அதில் விளக்கங்கள் பெற நேர்ந்தால் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தை 0451 - 2900233, 9442255737 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து