முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கர்நாடகாவில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      இந்தியா
Krishna river

Source: provided

பெங்களூரு : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80அடியாகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாக உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். நேற்று  காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75,06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 873 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து