முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை :  நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் வரும் 12-ம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-2025-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் தமிழக அரசு கோரியது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு 6 மாத இலவச உண்டு, உறைவிட பயிற்சி தரப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை  அமைச்சர் உதயநிதி  கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும் என்று 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே போட்டி தேர்வுக்காக 300 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது. மதுரை மற்றும் கோவை மையத்தில் தலா 350 பேருக்கு வங்கிப் பணி தேர்வுக்கு உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இந்நிலையில் இந்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் டெண்டர் கோரி உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் வரும் 12-ம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 5 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து