முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஆடிக்கிருத்திகை: திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : இன்று ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை  ரூ. 100 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, மற்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் நடைபெறும். இந்த  திருவிழாவில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று  (27-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. 

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கடந்த 23-ம் தேதி அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய 2 திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ரூ.200-யை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட கோவில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர்  மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணம் ரூ. 200-ஐ குறைத்து ரூ.100 ஆக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து