முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      உலகம்
Sri-Lanka-1 2024-03-23

கொழும்பு, இலங்கை பிரதமர் பதவியை தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார்.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 3 தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா குமார திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், அனுரா குமார திசநாயகே அபார வெற்றிபெற்றார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே படுதோல்வியடைந்தார்.

இதனிடையே, இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தனே செயல்பட்டு வந்தார். 75 வயதான குணவர்த்தனே 2022 ஜூலை முதல் இலங்கை பிரதமராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே வெற்றிபெற்ற நிலையில் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்த்தனே தற்போது ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு அமைய உள்ளதையடுத்து தினேஷ் குணவர்த்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து