முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வராக முறைப்படி பதவியேற்றார்: கெஜ்ரிவால் நாற்காலியை காலியாக விட்ட அதிஷி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      இந்தியா
Atishi 2024-03-23

புதுடெல்லி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் அம்மாநில முதல்வர் அதிஷி. இந்நிலையில், முதல்வர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார்.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திகார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய முதல்வராக அதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக அதிஷி சிங் மர்லேனா பதவியேற்றார். டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை அதிஷி, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். அது பலரது கவனத்தை பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,“ராமாயணத்தில் பரதருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இன்று எனக்கு. அவரது சுமையை போல நானும் இதை சுமக்கிறேன். எப்படி ராமரின் பாதுகையை (காலணி) அவர் தனது அரியணையில் வைத்து ஆட்சி செய்தாரோ, அதே உணர்வோடு அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லியை ஆட்சி செய்வேன்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து