முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற சரண் கோரிக்கை

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      சினிமா
Saran 2024-03-23

Source: provided

சென்னை : சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற முதல்வர் அலுவலகத்தில் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் தனது வாழ்நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது, 2021 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

ரசிகர்களால் பாடும் நிலா என அழைக்கப்பட்ட எஸ்பிபி கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 2020ம் உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் மக்களிடையே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பிபி வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து