முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாத்திரை நடத்தி பிரதமராகும் கனவை நனவாக்கப் பார்க்கிறார் அத்வானி-மொய்லி

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

மங்களூர், நவ.- 21 - யாத்திரை நடத்தி பிரதமராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க முயற்சி செய்கிறார் அத்வானி என்று மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி குற்றம் சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் இருந்து ஜனசேத்னா யாத்திரையை துவக்கினார். அவரது யாத்திரை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை கடந்து நேற்று டெல்லியில் முடிவடைந்தது.  இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் மங்களூரில் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அத்வானியின் ரதயாத்திரையை கிண்டல் செய்தார். இது அவரது தனிப்பட்ட யாத்திரை. பிரதமராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கப் பார்க்கிறார் அத்வானி. பிரதமராக வேண்டும் என்ற அத்வானியின் விருப்பம் ஏற்கனவே தோல்வியில் முடிவடைந்துவிட்டது. அதை தனது ரத யாத்திரை மூலம் வெற்றிகரமாக்கி பிரதமராகும் கனவை நனவாக்க முயற்சி செய்கிறார். இந்த யாத்திரையின் பின்னணியில் அன்னா ஹசாரே குழுவினரும் இருக்கிறார்கள். ஆனால் வாஜ்பாயைப் போல அத்வானி ஒரு பெரிய தலைவர் அல்ல. இவ்வாறு வீரப்பமொய்லி தெரிவித்தார். மங்களூரில் உள்ள பாஜ்பே விமான நிலையத்தை அடுத்த மாதம் சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago