முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல கன்னட நடிகை அபர்ணா காலமானார்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      சினிமா
Aparna-2024-07-12

பெங்களூரு, பிரபல கன்னட நடிகை அபர்ணா காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபல கன்னட நடிகை அபர்ணா (51). தூர்தர்ஷனின் கன்னட சேனலான சந்தனாவில் தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அபர்ணா, பெங்களூரு பனசங்கரி 2-வது ஸ்டேஜில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்தார். 

சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்த அபர்ணா, காயம் அடைந்து படுத்த படுக்கையானார். இதனால் அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அபர்ணா காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அபர்ணாவின் மறைவுக்கு மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   

1984-ம் ஆண்டு கன்னட படத்தில் அறிமுகமான அபர்ணா, பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் அபர்ணா நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஒளிபரப்பான மஜா டாக்கீஸ் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் வரலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 

மேலும் 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் அபர்ணா பங்கேற்றார். பெங்களூரு மெட்ரோ ரயிலில் அறிவிக்கப்படும் பயணிகள் ஏறுதல், இறங்குதல், இடங்கள் குறித்த அறிவிப்புக்கு அபர்ணா தான் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து