முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலங்குடி குருபகவான் உள்ளிட்ட 65 கோவில்களில் கோலாகலமாக நடந்த குடமுழுக்கு நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      ஆன்மிகம்
temple

சென்னை, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், ஆலங்குடி, குருபகவான் கோவில் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு நேற்று குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 

 தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 1,856 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோவில்களில் பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

குடமுழுக்கு நடந்து 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி, ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில், ரூ.170.11 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வரும் பெரியபாளையம் பவானியம்மன் கோவில், ரூ.1.52 கோடியில் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) கோவில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடந்த திருச்சி மாவட்டம், பூர்த்தி கோவில் திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.

குடமுழுக்கு நடைபெற்ற கோவில்களில் சேத்துப்பட்டு கருகாத்தம்மன், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் கோவில்,கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 கோவில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்துமாரியம்மன், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் சுந்தர விநாயகர் ஆகிய கோவில்களும் அடங்கும். 

குடமுழுக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீர் மந்திரங்கள் முழங்க கலசங்களில் ஊற்றப்பட்டன. 

கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர், பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து