முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க. 31-ம் ஆண்டு தொடக்க விழா: தொண்டர்களுக்கு வைகோ அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      அரசியல்
Vaiko 2023 05 01

சென்னை,  ம.தி.மு.க.வின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ம.தி.மு.க.வின் 31-ம் ஆண்டு தொடக்க விழாவையும், மக்களவைத் தேர்தல் வெற்றியையும் கொண்டாடும் வகையில் கட்சிக் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலான இரண்டு வார காலம் அனைத்து மாவட்டங்களிலும், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கிளை அளவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல்கட்டமாக கோவையில் அவைத் தலைவர் ஆடிட்டர்  அர்ஜூனராஜ், தருமபுரி, மதுரையில் பொருளாளர்  செந்திலதிபன், சென்னையில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, செங்கல்பட்டு, வேலூரில் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா உள்ளிட்டோர் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து