முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் மீ்ண்டும் பிரதமராக சர்மா ஒலி இன்று பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      உலகம்
Nepal 2024-07-14

Source: provided

காத்மாண்டு : நேபாளத்தில் மீண்டும் பிரதமராக சர்மா ஒலி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்று கொள்கின்றனர். 

நேபாளத்தில் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியில் அங்கம் வகித்து வந்த முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசந்தா, கடந்த 12-ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பான்மை பெற முடியாமல் பிரசந்தா அரசு தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து நேபாளி காங்கிரஸ் கட்சியும், நேபாள கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தன. 

பின்னர் புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம் கே.பி.சர்மா ஒலி உரிமை கோரினார். இதை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை நேற்று ஜனாதிபதி நியமித்தார். இன்று திங்கட்கிழமை காலையில் புதிய பிரதமரும், மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து