முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடுருவ முயற்சி முறியடிப்பு: காஷ்மீரில் பாதுகாப்புப்படையால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      இந்தியா
Kashmir

Source: provided

ஸ்ரீநகர் : பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப்படையினர் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து