முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடியாது: தமிழகத்திற்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் - கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      இந்தியா
Siddaramaiah-TK-Sivakumar-2

Source: provided

பெங்களூரு : ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த படி தினசரி ஒரு டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட முடியாது என்றும்,  தமிழகத்திற்கு தினசரி 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விட முடியும் என்றும் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை வழங்க உத்தரவிடும்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தியது. 

இம்மாதம் இறுதி வரை, தினமும் ஒரு  டி.எம்.சி., காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்து விடும்படி, உத்தரவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடும் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், காவிரி கரையோர மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.  இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  கூட்டத்தில், ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த படி தண்ணீரை திறந்து விட முடியாது. தினசரி 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விட முடியும். காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணயத்தில் மேல் முறையீடு செய்யவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 11500 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து