முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-03-29

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். 

அந்த வகையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடற்கரை, நாழிக்கிணறு, வள்ளி குகை போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

அதிகளவிலான பக்தர்களின் வருகையால், இலவச தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோருக்கு வழி என அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

இதனிடையே, கடலில் புனித நீராடிய சேலத்தை சேர்ந்த பெண் பக்தருக்கு கால் முறிவு ஏற்பட்டதையடுத்து, பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து