முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை முதல் நாள்: துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2023      ஆன்மிகம்
Ayyappa-devotees 2023-11-17

சென்னை, கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நேற்று துளசி  மாலை அணிந்து தங்களது விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்கினர். 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ம் தேதி அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

அதே போல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ம் தேதியான நேற்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் இதையொட்டி சென்னை முதலான பல ஊர்களிலும், காலையிலேயே  கோவில்களில் பக்தர்கள் குவியத் தொடங்கினார்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களில், சமீபத்தில் மழை வெளுத்து வாங்கியதால், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை  கார்த்திகை முதல் நாளில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழையை பொருட்படுத்தாமல், காலையிலேயே விரதம் இருக்கத் தொடங்கி விட்டார்கள் ஐயப்ப பக்தர்கள்.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில், மதுரையில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் பல கோவில்களிலும் மாலையணிந்து கொண்டு பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து