முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ-ஆபீஸ் வழியே தமிழக அரசு பணி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      தமிழகம்      உலகம்
Stalin 2021 11 29

சான் பிரான்சிஸ்கோ, அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு  டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.  அதன் ஒரு பகுதியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மாதம் அமெரிக்கா சென்றார். சான் பிரான்சிஸ்கோ மாநகரில் மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  அடுத்து சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட், டிரில்லியன்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 17 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து