எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்பகோணம் : தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் - கும்பகோணம் - விக்ரவாண்டி வரை உள்ள பிரதானச் சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டாருக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாகக் கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கியது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம், முதல் பிரிவாக விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ தூரத்திற்கும்,. 2-ம் பிரிவாக சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம்-சோழபுரம் வரை ரூ.2356.19 கோடியில் 50.480 கி.மீ. நீளத்திலும், 3-ம் பிரிவுகளாகச் சோழபுரம் முதல் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் புளியந்தோப்பு வரை ரூ.2374.69 கோடி மதிப்பீட்டில் 47.835 கி.மீ. நீளத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி- சோத்தியாப்தோப்பு வரையிலான சாலைப் பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டதால், மீதமுள்ள சேத்தியாத்தோப்பு முதல் தஞ்சாவூர் வரையிலான 2-ம் மற்றும் 3-ம் கட்டப் சாலைப் பணிகளை, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கார் மூலம் புறவழிச்சாலையை ஆய்வு மேற்கொண்டவர், மூப்பக்கோயில் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த அதன் வரைபடத்தைப் பார்வையிட்ட பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தஞ்சாவூர் – விக்கரவாண்டி நான்கு வழிச்சாலை ரூ. 4,730 கோடி மதிப்பீட்டில், 164 கி.மீ.தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்–சோழபுரம், சோழபுரம்– சேத்தியாதோப்பு வரையிலான சாலைப் பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது.
மொத்த திட்டத்தில் நில கையகப்படுத்துவதில், சிக்கல்கள் மற்றும் முக்கிய சுணக்கமாக இருந்ததால், ஒப்பந்தக்காரர்களால் இந்த சாலைப் பணியை முடிப்பதில் சிக்கல் உள்ளதாக, பணியை செய்ய முடியாத எனக் கூறி என்னை சந்தித்தனர். மேலும், சாலை அமைப்பதற்கான கட்டுமான மூல பொருட்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. இது போன்ற கடினமான சூழலிலும் பணிகள் முடிந்துள்ளது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலை மூலம் 10 புதிய சாலைகள் அமைப்பதற்காகத் திட்டம் 727 கி.மீ.தூரத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில், கோவை – சத்தியமங்கலம், தூத்துக்குடி – கன்னியாகுமரி, ராமநாதபுரம் – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – அரிச்சல்முனை, மதுரை – ராமேஸ்வரம், மங்களூர் – விழுப்புரம், மதுரை – தொண்டி, சேலம் – வாணியம்பாடி, மதுரை – தேனி உள்பட 10 ஊர்களுக்கு இடையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல், 1,343 கி.மீ. தூரத்திற்கு. 68 சாலைத் திட்டங்கள் மூலம் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 451 பல்வேறு சாலைத் திட்டங்கள் 9,300 கி.மீ. தூரத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில், தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, அதிகமான முக்கியத்தும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருவதுடன், தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை 4,975 சாலைகள் இருந்தது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு 6,806 சாலையாக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் 5 லட்சம் கோடியில் மதிப்பீட்டில், 10 ஆயிரம் கி.மீ.தூரத்திற்கு 27 புதிய பசுமை வழிச் சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் 3 பசுமை வழிச்சாலை, 187 கி.மீ., நீளத்தில் ரூ.10 ஆயிரத்து 100 கோடி செலவில் அமைய உள்ளது எனத்தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Nov 2024சென்னை : தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை மற்றும் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகரில் நேரடி கள ஆய்வு
08 Nov 2024சென்னை : விருதுநகரில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
08 Nov 2024சென்னை, அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
கலைஞர் செம்மொழித் தமிழ் விருது: முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
08 Nov 2024சென்னை, 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கி சிறப்பித்தார்.
-
வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் : எலான் மஸ்க் கணிப்பு
08 Nov 2024வாஷிங்டன் : வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
08 Nov 2024சென்னை : பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 8 ஆண்டுகள் நிறைவடைந்தது
08 Nov 2024புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.
-
சபரிமலையில் தரிசனத்துக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
08 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
08 Nov 2024சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்குகிறார் விஜய்
08 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்குகிறார்.
-
கூட்டுறவு துறையின் தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
08 Nov 2024சென்னை, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.
-
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்
08 Nov 2024சென்னை : கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
-
தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்றும் வகையில் புதிய சட்டம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
08 Nov 2024ஜெருசலேம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கோலி குறித்து ஜோதிடர் கணிப்பு
08 Nov 2024இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். தற்சமயம் பார்மின்றி தவித்து வருகிறார்.
-
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக சூசன் வைல்ஸ் : டொனால்டு டிரம்ப் நியமித்தார்
08 Nov 2024வாஷிங்டன் : தன்னுடைய தேர்தல் பிரச்சார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக டிரம்ப் நியமித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம்
08 Nov 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
இன்று முதல் தீர்ப்பளிக்க முடியாது: பிரியாவிடை நிகழ்ச்சியில் டி.ஒய்.சந்திரசூட் உருக்கம்
08 Nov 2024புதுதில்லி : யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இன்று முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
08 Nov 2024திருவண்ணாமலை : தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுவாச பிரச்னையால் மக்கள் கடும் பாதிப்பு
08 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
ஜன. 20-ல் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் : அதிபர் ஜோ பைடன் பேட்டி
08 Nov 2024வாஷிங்டன் : ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
வரும் ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை
08 Nov 2024பாரீஸ் : சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவானது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
-
வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
08 Nov 2024மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உத
-
ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
08 Nov 2024ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
08 Nov 2024புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2-வது ஒருநாள் போட்டி: ஆஸி.யை வீழ்த்தி பாக். வெற்றி
08 Nov 2024சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.