முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுன் ரூ.480 உயர்வு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விலையும் மளமளவென சரிந்தது. விலை குறைந்து கொண்டே வந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாக சரிவதும் என இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080-க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து