முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா சட்டப்பேரவை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கேவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      இந்தியா
Malligarjuna 2023-07-27

Source: provided

சண்டிகார் : அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளவிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

90 உறுப்பினர்களைக் கொண்டஅரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது. அரியானா தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியானா மாநிலத்தின் அம்பாலா நகரிலும், கர்னால் மாவட்டத்தின் கராண்டாவிலும் 2 தேர்தல் பேரணிகளில் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே பங்கேற்று உரையாற்றவிருந்தார். இந்நிலையில், அவர் உடல்நிலைக் கருதி ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த பேரணியில் கார்கே பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து