முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிப்பட்டியல்: முதல் மூன்று இடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

சென்னை : நியூசி.க்கு எதிராக இலங்கை வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளிப்பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முதல் 3 இடங்களை பெற்றுள்ளது.

இந்தியா முன்னிலை... 

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 

6 இடத்துக்கு சறுக்கல்...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி தனது இடத்தை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி, வங்கதேச அணியை 6 இடத்துக்கு தள்ளியுள்ளது.

இந்தியா 12 புள்ளிகள்...

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம், இந்திய அணிக்கு 12 புள்ளிகள் கிடைத்துள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 71.67 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. 62.50 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 50 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்திலும், 42.86 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி 4-வது இடத்திலும், 42.19 சதவிகித வெற்றிகளுடன் இங்கிலாந்து 5-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு வங்கதேசம் 39.29 சதவிகித வெற்றிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்பயணம்... 

இதற்கிடையே, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டில் இலங்கை 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும் தொடர்கின்றன.

நியூசிலாந்து சறுக்கல்...

நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை (50.00 சதவீதம்) ஒரு இடம் உயர்ந்து 3வது இடத்திற்கு வந்துள்ளது. தோல்வியை சந்தித்த நியூசிலாந்து (42.86 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு சென்றுள்ளது. 5வது இடத்தில் இங்கிலாந்தும் (42.19 சதவீதம்), 6வது இடத்தில் வங்காளதேசமும் (39.29 சதவீதம்) உள்ளன. 7 முதல் 9 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்), பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து