முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ராவுக்கு ஸ்மித் புகழாரம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      விளையாட்டு
Stuv-Sumet 2024-01-13

Source: provided

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 22 முதல் தொடங்கவுள்ளது. ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இவர்கள் முக்கியம்: ஆஸி. முன்னாள் கேப்டன் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்

னைத்து வடிவிலான போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக புதிய பந்தில் அல்லது சிறிது பழைய பந்தில் அல்லது பழைய பந்தில் விளையாடினாலும் அற்புதமாக பந்துவீசக் கூடியவர். புதிய பந்து, பழைய பந்து என இல்லாமல் அனைத்திலும் அவர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் எனக் கூறும் அளவுக்கு சிறப்பான பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக பேட் செய்வது எப்போதுமே சவாலானதாக இருக்கப் போகிறது என்றார்.

__________________________________________________________________________

பார்ட்னர்ஷிப் பண்ட் பதில்

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில்லுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைய காரணம் என்ன என்பது குறித்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட விடியோவில் அவர் பேசியதாவது: ஆடுகளத்துக்கு வெளியே ஒருவருடன் நல்ல நட்புறவு இருக்கும்போது, அவருடன் பேட்டிங் செய்வது எளிது. நானும் ஷுப்மன் கில்லும் ஆடுகளத்துக்கு வெளியே மிகவும் வேடிக்கையாக பேசிக் கொள்வோம். போட்டி குறித்து நிறைய பேசுவோம். எங்கள் இருவருக்கும் போட்டியின்போது என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவாக தெரிந்திருந்தது. அவருடனான நட்பு அவருடன் பார்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடுவதற்கு உதவியது.

கார் விபத்துக்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடியது குறித்து பேசிய ரிஷப்பண்ட், பேட்டிங் செய்யும்போது மிகவும் பதற்றமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இறுதியாக, சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது என்றார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து