எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, போதை அரக்கர்களின் பிடியில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதை தி.முக. அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்களை சிந்திக்க விடாமல் போதையிலேயே வைத்திருந்தால் ஆண்டாண்டு காலம் நாமே ஆளலாம் என்ற நப்பாசையில் முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கஞ்சா, கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன என்றும், இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றங்கள் பெருகுகின்றன என்றும் நான் பலமுறை சுட்டிக்காட்டியும், ஸ்டாலினின் திமுக அரசு இவற்றை கட்டுப்படுத்தவில்லை. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள அரசின் வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் எனப்படும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், சென்ற மாதம் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக தனியார் கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில், மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப் பொருள்கள் சுதந்திரமாக கிடைப்பதாக வந்த தகவல்களை அடுத்து காவல் துறையினர் சோதனை நடத்தியதாகச் செய்திகள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உள்ளன. லட்சக்கணக்கானவர்கள் வசிக்கும் இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து சமூக விரோதிகள் போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை எதிர்க்கட்சிகள், உயர்நீதிமன்றம், நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் ஸ்டாலினின் திமுக அரசு, போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். அதிகார போதையில், தான் வைத்ததே சட்டம், எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வேன், என்னைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று அகங்காரத்தோடு துக்ளக் தர்பார் நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2024.
30 Dec 2024 -
எச்.1 பி விசா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப்
30 Dec 2024வாஷிங்டன்: திறமையான தொழில்நுட்ப ஊழியருக்கான எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன் என்று டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
-
பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நேரில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையம்
30 Dec 2024சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தினர்.
-
படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Dec 2024தூத்துக்குடி: படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் என்று தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சரத்குமாரின் ஸ்மைல் மேன் விமர்சனம்
30 Dec 2024சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார்.
-
நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
30 Dec 2024தூத்துக்குடி: நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அலங்கு திரை விமர்சனம்
30 Dec 2024பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாயகன் குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார்.
-
செல்வராகவன்-ஜீ.வி.பிரகாஷ் இணையும் மெண்டல் மனதில்
30 Dec 2024செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்' மெண்டல் மனதில் 'எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
-
மேக்ஸ் திரை விமர்சனம்
30 Dec 2024பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீப், மீண்டும் பதவி ஏற்க இருக்கும் நாளுக்கு முந்தைய இரவில், இரண்டு இளைஞர்களை அடித்து துவைத்து லாக்கப்பில் அடைக்கிறார்.&nbs
-
35 சின்ன விஷயம் இல்ல விமர்சனம்
30 Dec 2024விஷ்வதேவ் - நிவேதா தாமஸ் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்..
-
திரு.மாணிக்கம் விமர்சனம்
30 Dec 2024சமுத்திரக்கனி, கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் விற்பனை கடையை நடத்தி வருகிறார்.
-
இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் இ.பி.எஸ். மீது அமைச்சர் குற்றச்சாட்டு
30 Dec 2024சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா? த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
30 Dec 2024புதுக்கோட்டை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
புத்தாண்டை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்
30 Dec 2024வேங்கிக்கால் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது.
-
மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்
30 Dec 2024சென்னை : பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி பல்வேறு சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
-
திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட 400 பேர் போலீசாரால் கைது
30 Dec 2024திண்டுக்கல் : திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட 400 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழக காவல்துறையில் 56 பேர் பணியிட மாற்றம் : கோவை போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம்
30 Dec 2024சென்னை : தமிழக காவல்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் பதவி உயர்வு பெற்றனர். அதையொட்டி, பணியிட மாற்றமும் நடைபெற்றது. 56 பேர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
-
விண்வெளியில் டிராபிக் ஜாம்: பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவும் நேரத்தை தள்ளிவைத்தது இஸ்ரோ
30 Dec 2024ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.
-
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கவர்னர் ரவியை நேரில் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் மனு
30 Dec 2024சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
-
தங்கம் விலை உயர்வு
30 Dec 2024சென்னை : தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனையானது.
-
பாட்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தடியடிக்கு கார்கே, பிரியங்கா கண்டனம்
30 Dec 2024பாட்னா: பீகார் மாநிலத்தின் பிபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி பாட்னா காந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய பிபிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மீது போலீஸார்
-
உடல் ரீதியான தொடுதல் வன்புணர்வு இல்லை: போக்ஸோ வழக்கில் இளைஞரை விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்
30 Dec 2024டெல்லி: உடல் ரீதியான தொடுதலால் மட்டுமே அதை பாலியல் உறவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என போஸ்கொ வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் ஒருவரை விடுவித்துள்ளது.
-
அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் சென்னை மாநகராட்சி முடிவு
30 Dec 2024சென்னை: அனுமதி பெறாத இன்டர்நெட் கம்பங்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
-
ஒடிசாவில் நடந்த சம்பவம்: பிறந்து குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தை
30 Dec 2024ஒடிசா : ஒடிசாவில் பிறந்து குழந்தையை விற்று புது பைக் வாங்கிய தந்தையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 1,363 பஸ் நிறுத்தங்களில் 2-ம் கட்ட தூய்மை பணி
30 Dec 2024சென்னை: சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 1,363 பஸ் நிறுத்தங்களில் 2-ம் கட்ட தூய்மை பணி நேற்று நடைபெற்றது.