முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      தமிழகம்
OS-Manian 2023-12-22

Source: provided

நாகை :  முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் நேற்று இ.சி.ஆர். சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார் ஓ.எஸ்.மணியன்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்புலம் பகுதியைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பூண்டி காரைநகர் அருகே அவரது கார் சென்ற போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் அதை தாறுமாறாக ஓட்டி வந்ததாகத் தெரிகிறது. 

அப்படி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநர் காரை வேகமாக திருபியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோயில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன்பக்க பகுதி சேதமடைந்த நிலையில் ஓ.எஸ்.மணியனும் அவரது கார் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லேசான சிறு காயத்தோடு அவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து