முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தன் டாடா மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      இந்தியா
Ratan-Tata-2024-10-10

Source: provided

மும்பை: இந்தியாவின் உண்மையான மகனை இழந்து விட்டோம் என்று ரத்தன்  டாடா மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார். 

பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.  அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் ரத்தன் டாடா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 

உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலைநோக்குப் பார்வையாலும் ஆர்வத்தாலும் இடம்பிடித்த ஒரு சிறந்த பழம்பெரும் சின்னம். ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர்.

பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட மனிதர்.. அவருக்கு எனது ஆழ்ந்த வணக்கங்கள். இந்த பெரிய ஆன்மாவுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றென்றும் போற்றுவேன். இந்தியாவின் உண்மையான மகனை இழந்து விட்டோம். இவ்வாறு  அந்த பதிவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து