முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
Koorala-Falls 2024-07-14

Source: provided

தென்காசி : தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். 

தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில், அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

 குறிப்பாக விடுமுறை நாட்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருக்கும் நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது.  

நேற்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாக குளியலில் ஈடுபட்டு, புகைப்படம் எடுத்து சென்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், குற்றாலம் அருவிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து