முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விஜய தசமியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
Vijayadashami 2023-10-24

சென்னை, விஜய தசமியை முன்னிட்டு நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.

தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும், கல்விக்கு உகந்த நாளாக விஜய தசமி கருதப்படுகிறது. அதனால் இந்த பண்டிகையை முன்னிட்டு தனியார் பள்ளிகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) மாணவர்கள் சேர்க்கை நேற்று மும்முரமாக நடந்தது. இதனிடையே பள்ளிகளுக்கு ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்காக வருகை தந்தனர்.

முன்னதாக விஜயதசமியை பண்டிகையை முன்னிட்டு அரசு தொடக்க பள்ளிகளை திறந்து வைக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும், அன்றைய தினம் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நேற்று அரசு பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து