முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் டி-20 உலகக்கோப்பை லீக்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      விளையாட்டு
13-Ram-53

Source: provided

சார்ஜா: பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்தது. 

ஸ்காட்லாந்து பேட்டிங்...

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இந்த நிலையில், மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தடுமாற்றம்...

அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஸ்காட்லாந்து அணி 109 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் கேத்ரின் பிரைஸ் 33 ரன்களும் , சாரா பிரைஸ் 27 ரன்களும் எடுத்தனர் .இங்கிலாந்து அணியில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 110 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது.

இங்கி. வெற்றி...

தொடக்க வீராங்கனைகளாக மயா பவுச்சியர் , டேனில் வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடைத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மயா பவுச்சியர் 62 ரன்களும் , டேனில் வாட் 51 ரன்களும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து