முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா கும்பமேளா 2025: வானில் 2 ஆயிரம் டிரோன்கள் மூலம் ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு : உத்தர பிரதேச அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      இந்தியா
Yogi 1

Source: provided

லக்னோ : மகா கும்பமேளாவை முன்னிட்டு 2 ஆயிரம் டிரோன்கள் மூலம் ஒளிக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது. இந்நிலையில், 'மகா கும்பமேளா 2025' வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமம் பகுதியில் வானில் சுமார் 2 ஆயிரம் டிரோன்கள் மூலம் ஒளிக்காட்சி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகா கும்பமேளாவின் தொடக்க நாள் மற்றும் நிறைவு நாளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், புராண கதைகளில் வரும் நிகழ்வுகளை விவரிக்கும் வகையிலான ஒளிக்காட்சி நிகழ்ச்சியாக இது அமையும் என்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அபராஜிதா சிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து