முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த வயதில் சதம்: நிதிஷ் ரெட்டி சாதனை

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      விளையாட்டு
Nitish-Reddy 2024-12-28

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்தார். இதன் மூலம் குறைந்த வயதில் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த 3-வது இந்திய வீரராக நிதிஷ் ரெட்டி சாதனை படைத்துள்ளார்.

மெல்போர்னில்... 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வலுவான நிலை...

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது. முன்னதாக இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தி வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். 

மாபெரும் சாதனை...

சுந்தர் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி சதமடித்த நிலையில் களத்தில் உள்ளார். இந்த சதத்தின் மூலம் நிதிஷ் ரெட்டி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

சச்சின் புகழாரம்....

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முக்கியமான தருணத்தில் சதம் விளாசிய நிதீஷ் குமார் ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நினைவில் நிற்கக் கூடிய சதத்தினை நிதீஷ் ரெட்டி விளாசியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிகவும் முக்கியமான தருணத்தில் இந்த தொடரின் மிக முக்கியமான இன்னிங்ஸை அவர் இன்று விளையாடியுள்ளார். அவருக்கு உறுதுணையாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். நன்றாக விளையாடினீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இளம் வயதில் சதம்

1. சச்சின் - 18 வயது 256 நாட்கள்.

2. ரிஷப் பண்ட் - 21 வயது 92 நாட்கள்.

3. நிதிஷ் ரெட்டி - 21 வயது 216 நாட்கள்.

4. தத்து பட்கர் - 22 வயது 46 நாட்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து