எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 884 மாணவிகள் பயனடைய உள்ளனர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம், காமராஜர் கல்லூரியில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் “புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தினை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்வினை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கிலிருந்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி எம்பி கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேரலை யில் பார்வையிட்டு மாதந் தோறும் ரூ1,000 பெறும் வகையிலான வங்கி கணக்கு பற்று அட்டைகளை 884 மாணவிகளுக்கு வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் உயர்கல்வியை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை கடந்த 2022 செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,566 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். உயர்கல்வி பயிலும் மாணவிகள் மட்டும் மாதந்தோறும் ரூ1,000 பெற்று வந்த நிலையில், அரசுப்பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் என்ற சிறப்பான திட்டத்தை 2024 ஆகஸ்ட்டு 9-ம் தேதி அன்று கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 5,099 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் ரூ1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இத் திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தமிழ்நாடு முதல்வரால் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் 884 மாணவி கள் பயனடைய உள்ளனர்.
இத்திட்டமானது கல்லூரி செல்லும் மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஏற்ப டுத்துவதாகவும், அவர்க ளுக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் வாங்குவது உள் ளிட்ட கல்வி தொடர்பான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதந் தோறும் ரூ.1,000 பேருதவியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களினால் உயர் கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுபோன்ற திட்டங்களை மாணவ, மாணவியர் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில், அமைக்கப்பட்டிருந்த நடமாடும் பணம் எடுக்கும் இயந்திர வாகனத்தில் மாணவியர் தங்களுக்கு வழங்கப்பட்ட பற்று அட்டைகளைப் பயன்படுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையில் மகிழ்ச்சியுடன் படம் எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப்.கலெக்டர் கோகுல், பெரம்பலூர் நக ராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மீனா அண்ணாதுரை, இராமலிங்கம், மாவட்டஊராட்சி துணைத்தலைவர் முத்த மிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சி லர்கள் தழுதாழை பாஸ்கர், மகாதேவி ஜெயபால், நக ராட்சி துணைத் தலைவர் ஆதவன், அட்மா தலைவர் ஜெகதீசன், சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
04 Jan 2025விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில் விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
04 Jan 2025சென்னை: 'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க., அதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் வாக்குமூலங்களே சாட்சி என்றும
-
கைதான ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார்: சிறப்பு விசாரணை குழுவிடம் தெரிவித்த பல்கலை. மாணவி
04 Jan 2025சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார் என்பதை சிறப்பு விசாரணை குழுவிடம் பாதிக்கப்பட்ட பல்கலை.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன திருவிழா தொடக்கம்
04 Jan 2025சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
சபரிமலை கோயில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
04 Jan 2025கேரளா, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கே.பாலகிருஷ்ணனின் கோரிக்கையை நிச்சயம் தி.மு.க. ஆட்சி நிறைவேற்றும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
04 Jan 2025சென்னை: திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா
04 Jan 2025டெல்லி: டெல்லியில் முதல்வர் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
-
எரிவாயு லாரி கவிழ்ந்த விவகாரம்: டிரைவர் கைது - 6 பிரிவுகளில் வழக்கு
04 Jan 2025கோவை: கோவையில் சமையல் கியாஸ் எரிவாயு லாரி கவிழ்ந்ததில் டிரைவரை போலீசார் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் அதிஷிக்கு எதிராக காங். வேட்பாளர் அறிவிப்பு
04 Jan 2025டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
பட்டாசு ஆலை பாதுகாப்பில் மெத்தனம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
04 Jan 2025சென்னை: பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்பிற்கான தண்டனை அடுத்த வாரம் அறிவிப்பு
04 Jan 2025வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பிற்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
-
கந்து வட்டி புகார் வழக்கு: நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை
04 Jan 2025குமரி: கந்து வட்டி புகார் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
சென்னை மாரத்தான் ஓட்டம்: இன்று சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கம்
04 Jan 2025சென்னை: சென்னையில் இன்று நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது
04 Jan 2025மும்பை: தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
04 Jan 2025புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.
-
குறைந்த பந்தில் அரைசதம்: விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்
04 Jan 2025BOX - 1
சிட்னி : குறைந்த பந்தில் அரைசதம் அடித்த விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.
-
சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்: இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய மத்திய அரசு
04 Jan 2025புதுடெல்லி: சீனாவில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய சிறப்புக்குழு
04 Jan 2025சென்னை : அண்ணா.
-
சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக மீட்பு
04 Jan 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர
-
இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
04 Jan 2025புதுடெல்லி: கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்றும் இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் என்று
-
மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த வந்தே பாரத் ரெயில் : மத்திய அமைச்சர் பகிர்ந்த வீடியோ வைரல்
04 Jan 2025புதுடில்லி : மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தின் போது, ஒரு டம்ளர் தண்ணீர் ஆடாமல் அசையாமல் இருந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் மத்திய
-
புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம்: சீனா அரசு அறிவிப்பு
04 Jan 2025சீனா, புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சீனா அரசு அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
04 Jan 2025சென்னை: தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி கடை வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
-
மின் அஞ்சல் மூலம் அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Jan 2025சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
04 Jan 2025விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் பொன்முடி நேரில் வழங்கினார்.