எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில், சட்டப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தப் பிறகும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
மேகதாதுவில் அணை கட்ட 2014-ம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடகா எடுக்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், எந்த நீர் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி, இரண்டு தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, என்னால் 5-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய நாட்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானங்கள் 12-12-2014 மற்றும் 27-03-2015 ஆகிய கடிதங்கள் மூலம் மத்திய அரசுக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது என்பதையும் நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுகிறேன். இது தொடர்பாக 26-03-2015 அன்று தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கல் என்ற போர்வையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வரின் தன்னிச்சையான அறிவிப்பு, தமிழக மக்களை குறிப்பாக விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக, பாசனத்திற்கும், குடிநீருக்கும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழகம் பாலைவனமாக கூடிய சூழ்நிலையும் உருவாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடாக முதல்வர் தன்னிச்சையாக அறிவித்து இருப்பதற்கு அ.தி.மு.க.வின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒருதலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும். எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில், சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 6 days ago |
-
தமிழகத்தில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய ரேசன் கடைகள் திறப்பு
03 Jan 2025சென்னை : கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தும் மத்திய அரசு: முத்தரசன் கண்டனம்
03 Jan 2025சென்னை : அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தும் மத்திய அரசு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
-
அமெரிக்க அதிபர், மனைவி பெற்ற பரிசு பொருட்கள் விவரம் வெளியீடு : பிரதமர் மோடி வழங்கிய வைரத்தின் மதிப்பு அதிகமாம்
03 Jan 2025அமெரிக்க : அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பரிசு பொருட்கள் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
-
பொங்கல் பரிசுத் தொகுப்பைபெற, வீடு வீடாக தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகிக்கும் பணி துவக்கம் : வரும் 13-ம் தேதி வரை வழங்க ஏற்பாடு
03 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்று முதல் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டத
-
விழுப்புரத்தில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை பலி
03 Jan 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் விளையாட்டின்போது கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்ததால், உள்ளே விழுந்த குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த
-
சிட்னி டெஸ்ட்டில் மீண்டும் தடுமாற்றம்: முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்
03 Jan 2025சிட்னி : சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் மீண்டும் சொதப்பியதன் காரணமாக முதல் இன்னி
-
மதுரையில் பேரணி செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.,வினர் கைதாகி விடுதலை
03 Jan 2025மதுரை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில் நீதி கேட்பு போராட்டம் நேற்று மதுரையில் நடந்தது.
-
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது: பா.ஜ.க மீது ராகுல் குற்றச்சாட்டு
03 Jan 2025டெல்லி : அரசுப் பணியாளர் தேர்வு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக சீரழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடைசி போட்டியில் விலகல்: ரோகித் சர்மா முடிவு குறித்து பும்ரா, ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி
03 Jan 2025சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவு குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் பேசியுள்ளனர்.
-
கூட்டத்தில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்
03 Jan 2025ஐதராபாத் : புஷ்பா 2 படம் பார்க்க ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்: ராமதாஸ் கண்டனம்
03 Jan 2025சென்னை : சிறுமியின் உயிரிழப்பு காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
-
துனிசியாவில் பயங்கரம்: 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
03 Jan 2025துனிசியா : துனிசியாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சோட்டா ராஜனின் உதவியாளர் கைது
03 Jan 2025மும்பை : 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜனின் உதவியாளரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
-
எனக்கென்று ஒரு வீடு கூட இல்லை: பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
03 Jan 2025புதுடெல்லி : தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்
03 Jan 2025கோவா : நடிகை சாக்ஷி அகர்வாலின் திருமணம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
-
வாக்குவாதத்தில் கான்ஸ்டாஸ்: பதிலடி கொடுத்த பும்ரா
03 Jan 2025சிட்னி : இந்திய அணி வீரர் பும்ராவுடன் வாக்குவாதத்தில் ஆஸ்திரேலிய வீரர் கான்ஸ்டாஸ் ஈடுபட்ட நிலையில் அதற்கு உடனடியாக பும்ரா பதிலடி கொடுத்த நிகழ்வை ஒட்டமொத்த இந்திய ரசிகர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2025.
04 Jan 2025 -
தனிப்பட்ட விமர்சனங்களில் விரும்பவில்லை: பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்
03 Jan 2025புதுடில்லி : நான் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட விரும்பவில்லை. துஷ்பிரயோக அரசியல் செய்ய மாட்டேன்,'' என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
ஆக்ராவில் பரபரப்பு: முகலாய மன்னர் அவுரங்கசீப் மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு
03 Jan 2025புதுடெல்லி : உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது.
-
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதிக்கு சபலென்கா தகுதி
03 Jan 2025பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அரினா சபலென்கா முன்னேறினார்.
-
கேல் ரத்னா விருது: குகேஷ் கருத்து
03 Jan 2025விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா, விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
04 Jan 2025புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.
-
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
04 Jan 2025விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில் விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கே.பாலகிருஷ்ணனின் கோரிக்கையை நிச்சயம் தி.மு.க. ஆட்சி நிறைவேற்றும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
04 Jan 2025சென்னை: திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?.
-
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குணமடைந்த சிறுமி டான்யாவுக்கு சொந்தமாக வீடு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
04 Jan 2025சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த ஆவடிசிறுமி டான்யாவுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின்சொந்தமாக வீடு