முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத்தில் நிலச்சரிவு: 5 யாத்ரீகர்கள் உயிரிழப்பு மீட்பு பணிகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
Kedarnath 2024-09-10

டேராடூன், உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் யாத்ரீகர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமுற்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம், கேதார்நாத் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி, யாத்ரீகர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடலையும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரமாக போராடி மீட்டனர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என ருத்ரபிரயாக் போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.  மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அவ்வழியாகச் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றார். சில தினங்களாக கனமழை கொட்டுவதே நிலச்சரிவுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து