முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறை அருகே கார், லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Acctnet

சிதம்பரம், மயிலாடுதுறை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவரை பார்ப்பதற்காக தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்றார்.  பின்னர் சென்னையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். 

இவர்கள் வந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த யாசர் அராபத் ( 40) என்பவர் ஒட்டி வந்தார்.  காரில் நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த ஹாஜிரா பேகம் (62), திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஹராபத் நிஷா ( 30) அவரது குழந்தை அப்னான் (வயது 3) ஆகியோர் பயணம் செய்தனர். காரை யாசர் அராபத் ஒட்டி வந்தார்.  

இந்த கார் நேற்று அதிகாலை சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி  கார் மீது மோதியது. இதில் இடுபாடுகளில் சிக்கிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.  அவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து