முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      உலகம்
Modi 2024-03-23

நியூயார்க், அமெரிக்காவில் அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதைத் தொடர்ந்து டெலவரில்அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் மோடி அங்கு நடந்த குவாட் கூட்டமைப்பில் பங்கேற்று உரையாற்றினார். 

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பில் பல்வேறு தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்மிங்டன் நகரத்தில் இந்த குவாட் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான இங்கு இந்தமாநாட்டை அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். குவாட் கூட்டமைப்பு தொடங்கியதும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அமெரிக்காவின் டெலவர் மாகாணம், வில்மிங்டனில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது அவருக்கு வெள்ளியில் செய்யப்பட்ட கலைநயமிக்க ரயிலை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். மகாராஷ்டிராவை சேர்ந்த கைவினைக் கலைஞர்களின் கலைத்திறனில் உருவான வெள்ளி ரயிலை அதிபர் பைடன் வியந்து பாராட்டினார். இந்த ரயிலில், 'டெல்லி- டெலவர்' என்று பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பஸ்மினா சால்வையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இது காஷ்மீரில் தயாரிக்கப்படும் கம்பளி ஆடை ஆகும். இந்த கம்பளி, லடாக் பகுதியை சேர்ந்த சாங்தேங்கி அல்லது பஸ்மினா ஆடு இனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. பின் னர் தாவரங்கள் மற்றும் தாதுக்களில் இருந்து எடுக்கப்படும் இயற்கையான சாயங்கள் தோய்க் கப்பட்டு பஸ்மினா சால்வை தயாரிக்கப்படுகிறது. காஷ்மீர் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய பஸ்மினா சால்வையை ஜில் பைடன் வியந்து பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து