முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாவர்க்கர் குறித்து விமர்சனம்: ராகுல் நேரில் ஆஜராக நாசிக் கோர்ட் சம்மன்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

நாசிக் : சாவர்க்கர் குறித்து ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசியதற்காக, நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நாசிக் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர் நாசிக் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில், 

 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் ராகுலின் பேச்சு மற்றும் அவரது பேட்டியை பார்த்தேன். இந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சாவர்க்கரின் நற்பெயர் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் பேச்சு இருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தேசப்பற்றாளருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவரின் பேச்சு மற்றும் அறிக்கையை பார்க்கும் போது, அது அவதூறு ஏற்படுத்தும் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. 

வழக்கை நடத்துவதற்கான காரணங்கள் உள்ளன. வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் போது ராகுல் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து